டெல்லி முதல்–மந்திரியாக ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயாராகி வருகிறது. பதவி ஏற்பு விழாவில் டெல்லி மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொண்டர்களும் ரஷியாவில் இருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர். இதை அறிந்த அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து வெளியே வந்து அவர்களிடம் குறை கேட்டார்.
கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவதாக கூறினார். பின்னர் பொது மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இந்த வெற்றி எனக்கு கிடைத்தது அல்ல. பொதுமக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் எல்லோரும் என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள். ‘‘நான் மீண்டும் சொல்கிறேன் இது உங்கள் வெற்றி’’ என்றார்.
வந்திருந்த கட்சி தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் வக்கீல்கள், என்ஜினீயர்கள், மாணவர்கள் ஆவார்கள். அவர்களில் சிலர் நீங்கள் இப்போது எங்கள் தலைவர் ஆகிவிட்டீர்கள். எனவே போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர்.
அனைவரையும் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
0 comments:
Post a Comment